சிவகங்கை அருகே- சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
சிவகங்கை அருகே காராம்போடை கிராமத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சிவகங்கை அருகே காராம்போடை கிராமத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் காராம்போடை-இடையமேலூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 60 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை முனிச்சாமி மற்றும் கோட்டணத்தாம்பட்டி பாலு வண்டியும், 2-வது பரிசை தேவாரம் நல்லு வண்டியும், 3-வது பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 48 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை நாட்டரசன்கோட்டை ராமையா வண்டியும், 2-வது பரிசை நல்லாங்குடி முத்தையா வண்டியும், 3-வது பரிசை காராம்போடை ராஜா மற்றும் கல்லுப்பட்டி குருந்தடியான் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை அப்பன்திருப்பதி ராகுல் வண்டியும், 2-வது பரிசை திருவாதவூர் தன்வந்த்பிரசாம் வண்டியும், 3-வது பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பை, வெள்ளி தார் கம்பு ஆகியவை வழங்கப்பட்டது.