கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

காளையார்கோவில் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.;

Update:2022-08-20 22:37 IST

காளையார்கோவில்,

காளையார்கோவில் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

காளையார்கோவில் அருகே சிலுக்கப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நெடுந்தாவு கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நெடுந்தாவு-காயாஓடை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 36 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக போட்டி நடந்தது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை நெடுந்தாவு மாணிக்கம் ரவி வண்டியும், 2-வது பரிசை தேனி மாவட்டம் கே.பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னையா வண்டியும், 3-வது பரிசை நரசிங்கம்பட்டி மலையாண்டி வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 24 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை கிடாரிப்பட்டி தேர்கொண்ட கருப்பர் வண்டியும், 2-வது பரிசை பிரவலூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசன் வண்டியும், 3-வது பரிசை பெரியகண்ணனூர் முத்துபழனி வண்டியும் பெற்றது. 2-வது பிரிவில் முதல் பரிசை சிலுக்கப்பட்டி ஊராட்சி தலைவர் திருமூர்த்தி வண்டியும், 2-வது பரிசை குமாரபட்டி ஜெயராஜ் வண்டியும், 3-வது பரிசை தானாவயல் வெங்கடாசலம் வண்டியும் பெற்றது.

காளையார்கோவில்

இதேபோல் காளையார்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் காளையார்கோவில்-மறவமங்கலம் சாலையில் நடைபெற்றது. மொத்தம் 38 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை நல்லாங்குடி முத்தையா வண்டியும், 3-வது பரிசை மேலமடை சீமான்ராஜா வண்டியும் பெற்றது.

சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 27 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை காளையார்கோவில் முருகன் வண்டியும், 2-வது பரிசை கோட்டணத்தம்பட்டி ரவி வண்டியும், 3-வது பரிசை தேனி மாவட்டம் பாலார்பட்டி ராஜபாண்டி வண்டியும் பெற்றது. 2-வது பிரிவில் முதல் பரிசை திருச்சி செந்தில்பிரசாத் வண்டியும், 2-வது பரிசை ஆலத்துப்பட்டி அழகு வண்டியும், 3-வது பரிசை கம்பம் குமார் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்