கோவில் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

கோவில் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

Update: 2023-08-23 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே பி.உசிலங்குளம் கிராமத்தில் செல்வ விநாயகர், முத்தாலம்மன், நொண்டி கருப்பண சாமி, குணவள்ளி கோவிலில் 18-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. விழாவிற்கு முன்னால் கூட்டுறவு சங்க தலைவர் காளிமுத்து, வக்கீல் ராஜா கார்த்திகேயன், எம்.கரிசல்குளம் ஊராட்சி தலைவர் வில்வ சாந்தி செந்தூரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா முன்னிலை வகித்தார். மாட்டுவண்டி பந்தயத்தை கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தொடங்கி வைத்தார்.

பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை கடம்பூர் இளைய ஜமீன்தார் கருணாகரராஜா வண்டியும், 2-வது பரிசை மேல செல்வனூர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி வண்டியும், 3-வது பரிசை மேலமடை சீமான் ராஜா வண்டியும் பெற்றது.

சின்ன மாட்டு வண்டி பந்தயம் இரு பிரிவுகளாக நடந்தது. இதில் முதல் பிரிவில் முதல் பரிசை மேல மாவிலங்கை வெற்றி புகழ் வண்டியும், 2-வது பரிசை உசிலங்குளம் கருப்புத்துரை பாண்டியன் வண்டியும், 3-வது பரிசை ஆப்பனூர் மாரியம்மாள் வண்டியும் பெற்றது.

2-வது பிரிவில் முதல் பரிசை சித்தரங்குடி ராமமூர்த்தி வண்டியும், 2-வது பரிசை ரெட்டியாபட்டி ஐயப்பன் வண்டியும், 3-வது பரிசை இரு வேலி சிக்கந்தர் வண்டியும் பெற்றது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், பி.உசிலங்குளம் பொதுமக்கள், நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்