மாட்டு வண்டி எல்கை பந்தயம்
அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் பொற்பனை முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிடாவெட்டு பூஜையை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 45 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பந்தயம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்றது.
கோப்பைகள்
பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 6 ஜோடி மாட்டு வண்டிகளும், நடு மாடு பிரிவில் 17 ஜோடி மாட்டு வண்டிகளும், கரிச்சான் மாடு பிரிவில் 24 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டு எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 3 பிரிவுகளின் மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் பந்தயத்தில் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடி பரிசு மற்றும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. சாலையில் இரு புறத்திலும் ரசிகர்கள் திறண்டு நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அறந்தாங்கி போலீசார் செய்திருந்தனர்.