காளை விடும் விழா

களம்பூரில் காளை விடும் விழா நடந்தது.;

Update:2023-02-26 22:14 IST

ஆரணி

ஆரணி அருகே களம்பூர் பேரூராட்சியில் மாசி மாத கிருத்திகை பெருவிழாவையொட்டி 37-வது ஆண்டு காளை விடும் விழா இன்று நடந்தது.

இதையொட்டி திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட காளைகளை உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.

காளைகளை மேட்டு தெருவில் வாடிவாசல் வழியாக விடப்பட்டது.

விழாவை காண கிராமத்தில் உள்ள உறவினர்களின் நண்பர்கள், பகுதி பொதுமக்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற இளைஞர்களில் சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக அங்கு தற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

இதில் தீவிர சிகிச்சை அளிக்க 5 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்