கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

பனவடலிசத்திரம் அருகே மருக்காலங்குளத்தில் கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-07-30 18:45 GMT

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே மருக்காலங்குளம் சமுதாய நலக்கூடத்தில் தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் தென்காசி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மருக்காலங்குளம் கிளை அமைப்பாளர் காளிச்சாமி தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் ராமகிருஷ்ணன், செயலாளர் மணி, மாவட்ட துணைச் செயலாளர் அழகுதுரை ஆகியோர் முன்னிலை வைத்தனர். கிளைச் செயலாளர் அய்யாதுரை வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க மாநில தலைவர் மகாலிங்கம் கலந்துகொண்டு பேசினார். மாநில சட்ட ஆலோசகர் சக்திவேல், பொருளாளர் பேச்சியப்பன், மாவட்ட கவுரவ ஆலோசகர் பேச்சிமுத்து, மாவட்ட துணை தலைவர் கோவிந்தன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் குமாரசாமி, சீனிபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அகில இந்திய அமைப்புச் சாரா மற்றும் கட்டிடத் தொழிலாளர்களுக்கு பென்ஷன் தொகையை ரூ.1200 ஆக உயர்த்தி வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கட்டுமான பொருட்களான மணல், செங்கல், சிமெண்டு, கம்பி ஆகிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தியும், கட்டுமான தொழில் பாதிப்பின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் கிளை தலைவர் சின்னத்துரை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்