தமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொடர் முயற்சியாக பட்ஜெட் அமைந்துள்ளது: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொடர் முயற்சியாக பட்ஜெட் அமைந்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.;

Update:2023-03-20 19:21 IST
தமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொடர் முயற்சியாக பட்ஜெட் அமைந்துள்ளது: கே.எஸ்.அழகிரி

சென்னை,

தமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொடர் முயற்சியாக பட்ஜெட் அமைந்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து 2-வது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்து தமிழகத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வதற்கான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி நிதி ஒதுக்கியிருக்கிறார்.

பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, சுகாதாரம் ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகள் 85 சதவீதம் 22 மாதங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எஞ்சியிருக்கிற வாக்குறுதிகளும் நிறைவேற்றுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மனதார பாராட்டுகிறேன். தமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொடர் முயற்சியாக பட்ஜெட் அமைந்திருப்பதை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்" என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்