பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திருடிய 3 பேர் கைது
கடையத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:
கடையத்தில் அம்பை- தென்காசி மெயின் ரோட்டில் பி.எஸ்.என்.எல.் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 3 நபர்கள் கண்ணாடியை உடைத்து கேபிள் வயர், பேட்டரி ஆகியவற்றை திருடிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், நெல்லை பேட்டையை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.