புரூலியா-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை ரத்து

ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக புரூலியா-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.

Update: 2023-08-12 18:45 GMT

விழுப்புரம்

தெற்கு மத்திய ரெயில்வேயின் விஜயவாடா கோட்டத்துக்குட்பட்ட விஜயவாடா- குண்டூர் பிரிவில் மனுபோலு-குண்டூர் இடையே 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று பகல் 12.15 மணிக்கு புறப்பட வேண்டிய வாரம் இருமுறை இயக்கப்படும் விழுப்புரம்-புரூலியா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22606) முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதேபோல் மறுமார்க்கத்தில் புரூலியாவில் இருந்து நாளை(திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு புறப்பட வேண்டிய புரூலியா-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 22605) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்