ஊராட்சி செயலாளரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது

ஊராட்சி செயலாளரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-02 19:35 GMT

தா.பேட்டை:

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கண்ணனூர் ஊராட்சியின் செயலாளராக வேல்முருகன் (வயது 45) என்பவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவர் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக கணக்கெடுக்கும் பணியை முடித்துவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து, 100 நாள் வேலை திட்டத்தில் புதிய அட்டை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது கண்ணனூர் சமத்துவபுரம் வடக்குவெளி பகுதியை சேர்ந்த மலையப்பன் (30), அவரது தம்பி மாமுண்டி (28) மற்றும் சிலர் சேர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் புகுந்து, வேல்முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மலையப்பன், மாமுண்டி உள்ளிட்டோர் சேர்ந்து வேல்முருகனை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டி உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து மலையப்பன், மாமுண்டி ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்