வாலிபரை தாக்கிய அண்ணன், தம்பி கைது

வாலிபரை தாக்கிய அண்ணன், தம்பி கைது

Update: 2023-03-16 18:45 GMT

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் பகண்டை கூட்டுரோடு அடுத்த அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் அருள்மணி (வயது 32). இவரது மனைவி பானுப்பிரியா. இவர் வீட்டு வாசலில் பாத்திரம் கழுவி கொண்டிருந்தபோது, தண்ணீர் பக்கத்து வீட்டு வாசல் வழியாக சென்றது.

அப்போது, அந்த வீட்டைச் சேர்ந்த அருணாச்சலம் மகன்கள் அருள் (28), ரவி (23), விஜய் ஆகியோர் பானுப்பிரியாவை திட்டியுள்ளனர். இதுகுறித்து அருள்மணி கேட்டபோது அருள், ரவி, விஜய் ஆகிய 3 பேரும் சேர்ந்து அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பகண்டை கூட்டுரோடு போலீசில் அருள்மணி கொடுத்த புகாரின் பேரில் அருள், ரவி, விஜய் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருள், ரவி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்