தங்கையை தாக்கிய அண்ணன் கைது

மூலைக்கரைப்பட்டி அருகே தங்கையை தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-04 18:58 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேலமுனைஞ்சிப்பட்டி முத்துவீரப்பபுரம் ஊரைச் சேர்ந்தவர்கள் பூல்கோனார் மகன் சிவன் (வயது 37), கொத்தனார். அவரது தங்கை சுந்தராட்சி (34). வள்ளியூர் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் பக்கத்து, பக்கத்து வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சிவன் வீட்டில் உள்ள டிபன் பாக்ஸை சுந்தராட்சி தனது வீட்டுக்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து சிவன் தனது தங்கையிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவன் அங்கு கிடந்த கம்பு, கல் கொண்டு சுந்தராட்சியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து சிவனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்