மாநில குத்துச்சண்டை போட்டியில் அரசு பள்ளி மாணவருக்கு வெண்கல பதக்கம்
மாநில குத்துச்சண்டை போட்டியில் பாவூர்சத்திரம் அரசு பள்ளி மாணவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
பாவூர்சத்திரம்:
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் பாவூர்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் 3 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 12-ம் வகுப்பு மாணவர் பால்மணி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார். சாதனை படைத்த மாணவரை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.