கடையின் பூட்டை உடைத்து சிகரெட் பண்டல்கள், பணம் திருட்டு

கடையின் பூட்டை உடைத்து சிகரெட் பண்டல்கள், பணம் திருடப்பட்டது.

Update: 2023-02-24 19:46 GMT

திருச்சி அரியமங்கலம் வடக்கு உக்கடை பகுதியை சேர்ந்தவர் பாலன் (வயது 58). இவர் திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் டீக்கடையுடன், ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, ரூ.7 ஆயிரத்து 500 மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள், ரூ.8 ஆயிரத்து 500 திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையின் பூட்டை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்