வீட்டின் பூட்டை உடைத்து 2 மடிக்கணினிகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 2 மடிக்கணினிகள் திருட்டு போனது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு திருச்சி சென்று விட்டு, பின்னர் மதியம் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 2 மடிக்கணினிகள், 2 ஏ.டி.எம். கார்டுகள், 500 ரூபாய், வெள்ளி சங்கிலி ஆகியவை திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.