நெடுஞ்சாலைத்துறை உயர்மட்ட பாலப்பணிகள்

தஞ்சை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை உயர்மட்ட பாலப்பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்

Update: 2022-09-24 20:38 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் வட்டத்தின் மூலம் வல்லம், பேராவூரணி, காலம், கார்காவயல் உள்ளிட்ட இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சில இடங்களில் பாலப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் ஆய்வுப்பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த உயர்மட்ட பாலங்கள் மற்றும் ரெயில்வே சாலை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகின் தலைமைப்பொறியாளர் முருகேசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளின் தரம் குறித்து தரக்கட்டுப்பாடு சோதனைகளையும் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கண்காணிப்புப்பொறியாளர் சீனிவாசராகவன், கோட்டப்பொறியாளர் முருகானந்தம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்