ஆமை வேகத்தில் நடைபெறும் தரைப்பாலம் சீரமைப்பு பணி

விரிஞ்சிபுரம் தரைப்பாலம் சீரமைப்பு பணி த்தில் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.

Update: 2023-07-09 16:49 GMT

அணைக்கட்டு தாலுகா விரிஞ்சிபுரம் பாலாற்றில் தரைப்பாலம் உள்ளது. இதன் வழியாக குடியாத்தம், கே.வி.குப்பம், மகாதேவமலை, வடுகந்தாங்கல், சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வந்தன.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காமராஜபுரம் பகுதியில் அருகே தரை பாலம் உடைந்து கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் ஒரு வருடமாக அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட து.

இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டு உடைந்த தரைப்பாலம் வரை புதிய தரைப்பாலம் கட்டுவதற்கான அனுமதியை வழங்கினார்.

இந்த நிலையில் தரைப்பாலம் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது என்றும், இதனால் இரவு நேரங்களில் பாலாற்றில் இருந்து டிப்பர் லாரிகளில் விரிஞ்சிபுரம் வழியாக மணல் கடத்தப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்