தங்கம்மாள் ஓடையில் பாலம்கட்டும் பணி

தங்கம்மாள் ஓடையில் பாலம்கட்டும் பணி;

Update:2023-07-14 17:39 IST

தளி

உடுமலை தங்கம்மாள் ஓடையில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கம்மாள் ஓடை

உடுமலை நகரின் நுழைவு பகுதியில் உடுமலை - பொள்ளாச்சி சாலையை ஒட்டிய பகுதியில் தங்கமாள் ஓடை உள்ளது. இதில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற உபரிநீர் செல்கிறது. இந்த ஓடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரபட்டு அதன் இரண்டு புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால் தூர் வாரும்போது எடுக்கப்பட்ட மண்ணை முழுமையாக அகற்ற வில்லை. இதனால் அவை சரிந்து மீண்டும் ஓடையை ஆக்கிரமித்துக் கொண்டது. இதன் காரணமாக தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வந்ததுடன் ஓடை முழுவதும் செடிகள் புற்கள் முளைத்து புதர் மண்டியது.

பாலம்கட்டும் பணி

அதைத் தொடர்ந்து ஓடையை முழுமையாக தூர்வாரி அதில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் ஓடையில் தேங்கிய மண் அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி வருகிறது. மேலும் ஓடையின் இரு புறங்களையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட தரைமட்ட பாலங்களும் சேதமடைந்தது. அதை அகற்றிவிட்டு புதிதாக கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்