கொண்டலாம்பட்டி:-
சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்தூர் வைத்தியக்காரன் காட்டை சேர்ந்தவர் தேவா என்ற தியாகராஜன் (வயது 40), கொத்தனார். இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து நெய்க்காரப்பட்டி இளந்தோப்புக்கு மொபட்டில் வந்தார். எதிரே வந்த கார் தியாகராஜன் மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.