தியாகதுருகம் அருகேடிராக்டர் மோதி செங்கல் சூளை உரிமையாளர் பலி
தியாகதுருகம் அருகே டிராக்டர் மோதி செங்கல் சூளை உரிமையாளர் பலியானார்.;
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி அருகே ஆத்துமாமாந்தூர் கிராமத்தை சேர்நதவர் சேகர் மகன் விஜய் (வயது 27), இவர் மலைக்கோட்டாலம் கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வந்தார். விஜய் நேற்று முன்தினம் மலைக்கோட்டாலம் சென்றுவிட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் சாலையில் வந்தபோது, எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.