வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
கணபதியில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
கணபதி,
கணபதி போலீஸ் குடியிருப்பு பகுதியின் பின்புறம் உள்ள ஜெயமாருதி நகரில் வசிபவர் மகபூப் (வயது 47). பழைய இரும்பு வியாபாரி. இவர் கடந்த 5-ந் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றார். பின்னர் கோவை திரும்பி வந்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.