வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகை திருட்டு போனது.

Update: 2022-05-30 17:53 GMT

வேப்பந்தட்டை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் மாருதி நகரை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி சுசீலா (வயது 48). சுந்தரம் நாகர்கோவில் அருகே உள்ள தக்கை பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். சுசீலாவும், அவரது மகளும் மாருதி நகரில் உள்ள தங்கள் வீட்டில் வசித்து வருகிறனர். இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள கணவரை பார்ப்பதற்காக சுசீலாவும், அவரது மகளும் கடந்த 19-ந்் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் சுசீலா நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8½ பவுன் நகை, நான்கு வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சுசீலா கை.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்