வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகை திருட்டு போனது.

Update: 2022-06-09 18:48 GMT

அரிமளம்:

அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி பூனையன் வீதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவர் தனது குடும்பத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்காக வெளியூர் சென்றுள்ளார். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் தர்மராஜ் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, வீட்டின் உள்ளே இருந்த 2 பீரோவை உடைத்துள்ளனர். மேலும் பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். மற்றொரு பீரோவின் முன் கதவை திறந்து உள்ளனர். ஆனால் உள்ளே உள்ள லாக்கரை மர்மநபர்களால் திறக்க முடியவில்லை. இதனால் அதில் இருந்த 35 பவுன் தங்கநகை தப்பியது. இதுகுறித்து தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில், கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. துணைபோலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்