பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்ட ஆலோசனை கூட்டம்
சங்கரன்கோவில் நகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.;
சங்கரன்கோவில்:
தமிழக அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி திட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பள்ளிகளில் விரைவில் முதல்-அமைச்சரால் தொடங்கப்பட உள்ளதால் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை நடத்தினர்.