காலை உணவு திட்டம்:ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் 'தினத்தந்தி'க்கு பாராட்டு
காலை உணவு திட்டம் பற்றி ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் ‘தினத்தந்தி’க்கு பாராட்டு தொிவிக்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. மேயர் சு.நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநகராட்சி 1-ம் மண்டல தலைவர் பி.கே.பழனிச்சாமி தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து பேசினார். அப்போது அவர் 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 28-ந் தேதி தினம் ஒரு தகவல் பகுதியில் வெளியிடப்பட்டு இருந்த காலை உணவு குறித்த தகவல்களை முழுமையாக படித்து காலை உணவு திட்டத்தின் பெருமையை 'தினத்தந்தி' சிறப்பாக வெளியிட்டு இருப்பதாக மாமன்ற கூட்டத்தில் பதிவு செய்தார். மேலும், அவர் தினத்தந்திக்கு பாராட்டு தெரிவித்தார். அவரது கருத்துக்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.