கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தியாகதுருகம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே பீளமேடு பகுதியில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அதே கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று மாலையில் பூஜை முடிந்ததும் கதிர்வேல் கோவிலை பூட்டி விட்டுசென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கோவில் உண்டியலில் போடப்பட்ட பூட்டு உடைந்து திறந்த நிலையில் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்று விட்டனர். இது குறித்து கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வவைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.