வீடுபுகுந்து தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு

பணகுடியில் வீடுபுகுந்து தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2022-11-06 19:41 GMT

பணகுடி:

பணகுடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் மனோகர். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29). கொத்தனாரான இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த மூர்த்திக்கும் இடையே முன்விேராதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் மூர்த்தி உள்ளிட்ட 3 பேர், மணிகண்டனின் வீட்டுக்கு சென்று தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற மணிகண்டனின் தந்தை மனோகரையும் வெட்டி விட்டு, தப்பி ஓடி விட்டனர்.

இதில் படுகாயமடைந்த மணிகண்டன், மனோகர் ஆகிய 2 பேரையும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மூர்த்தி உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்