கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடு போனது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த எண்ணாயிரம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவில் பூசாரி ஜெயக்கண்ணு கோவிலுக்கு வந்து பார்த்த போது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் இருந்த பணமும் திருடு போயிருந்தது.
இரவில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் ரூ.10 ஆயிரம் பணம் இருந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.