கார் மோதி சிறுவன் படுகாயம்
சின்னசேலம் அருகே கார் மோதி சிறுவன் படுகாயம் அடைந்தான்.;
சின்னசேலம்
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் அக்ரஹாரத் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் வெங்கடேஷ்மணி (வயது 27). இவர் சின்னசேலம் அடுத்த நைனார்பாளையத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சம்பள பணம் வாங்குவதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது அக்காள் மகன் ரித்தீசுடன்(4) கனியாமூர் கைகாட்டி அருகே சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று வெங்கடேஷ்மணி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரித்தீஷ், கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார், விபத்துக்கு காரணமான ஈரோட்டை சேர்ந்த சுப்பிரமணியன்(38) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.