சிற்றார் அணையில் மூழ்கி சிறுவன் பலி

அருமனை அருகே குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில் சிற்றார் அணையில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2023-04-23 18:45 GMT

அருமனை,

அருமனை அருகே குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில் சிற்றார் அணையில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

கேரளாவில் இருந்து வந்தவர்கள்

அருமனை அருகே உள்ள நெட்டா சங்கரன்கடவு என்ற இடத்தில் சிற்றார் 2 அணையின் நீர்த்தேக்கம் பகுதி உள்ளது. இங்கு தினமும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்த்தேக்க பகுதியில் வந்து குவிந்தனர்.

இந்தநிலையில் நேற்று குமரி-கேரள எல்லை பகுதியான தேக்குபாறை கூட்டப்பு என்ற இடத்தைச் சேர்ந்த செமுனாந் தனது மகன் முகமது சோலிகி (வயது13) மற்றும் குடும்பத்தினருடன் ஆட்டோவில் சங்கரன்கடவு பகுதிக்கு சுற்றுலா வந்தார். அவருடன் சில உறவினர்களும் வேறு வாகனங்களில் வந்தனர்.

அவர்கள் அங்கு உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். பின்னர் கைகழுவதற்காக சிறுவன் முகமது சோலிகியும், அவரது தம்பியும் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு சென்றனர்.

தம்பியை காப்பாற்ற முயன்றார்

அவர்கள் அங்கு இருந்த பாறையில் ஏறி கைகழுவ முயன்ற போது தம்பி தவறி தண்ணீரில் விழுந்தான். இதை பார்த்த முகமது சோலிகி தனது தம்பியை காப்பாற்ற முயன்றான். இதில் அவனும் தண்ணீரில் விழுந்தான். இருவரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

இதை பார்த்த உறவினர் ஒருவர் ஓடி சென்று சிறுவர்களை காப்பாற்ற முயன்றார். அதில் தம்பி காப்பாற்றப்பட்டான். முகமது சோலிகி ஆழமான பகுதியில் சிக்கியதால் தண்ணீரில் மூழ்கினான். இதை பார்த்த தந்தை செமுனாந் மற்றும் உறவினர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து முகமது சோலிகியை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை.

இதுகுறித்து கடையல் போலீசாருக்கும், குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

பிணமாக மீட்பு

குலசேகரம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிைடயே தீயணைப்பு படையினர் கொண்டு வந்த பைபர் படகு பழுதடைந்து தண்ணீர் உள்ளே புகுந்ததால் தேடுதல் பணியில் சற்று ெதாய்வு ஏற்பட்டது. இறுதியில் சுமார் 3 மணி நேரம் தேடிய பின்பு முகமது சோலிகி பிணமாக மீட்கப்பட்டான். இதையடுத்து பிணத்தை கடையல் போலீசார் கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிறுவன் முகமது சோலிகி கேரள மாநிலம் வெள்ளறடையில் ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

சுற்றுலா வந்த இடத்தில் பலியான சிறுவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர் கதறி அழுதது காண்பவர் ெநஞ்சை உருக்கும் வண்ணம் இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்