சிறுவன் தற்கொலை

தேவதானப்பட்டி அருகே 17 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2022-10-20 17:12 GMT

மதுரை அருகே உள்ள அச்சம்பத்து பகுதியை சேர்ந்தவர் காமராஜ். அவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 17). இவர், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயக்குமார் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்