மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி
தஞ்சை மண்டல அளவிலான மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கி வைத்தார்
தஞ்சை மண்டல அளவிலான மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைதான உள்அரங்கில் நடந்தது. போட்டிக்கு மயிலாடுதுறை மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா போட்டியை தொடங்கி வைத்தார். 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.