மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

பேரணாம்பட்டு அருகே மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-16 17:37 GMT

பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரிக்குத்தி பஸ் நிறுத்தத்தில் ஒருவர் பையுடன் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த அபிமன்னன் (52) என்றும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி கடத்தி வந்து பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்து 180 மில்லி கொண்ட 77 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிமன்னனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்