புத்தக கண்காட்சி விழிப்புணர்வு ஊர்வலம்: மேளதாளம் வாசிக்க இஸ்லாமியர்கள் எதிர்ப்பு - விருதுநகரில் பரபரப்பு

விருதுநகரில், புத்தக கண்காட்சி விழிப்புணர்வு ஊர்வலத்தில், மேளதாளம் வாசிக்க இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-13 08:49 GMT

விருதுநகர்,

விருதுநகரில், புத்தக கண்காட்சி விழிப்புணர்வு ஊர்வலத்தில், மேளதாளம் வாசிக்க இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்குள்ள தனியார் பள்ளியில் புத்தக கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, வருவாய் வட்டாட்சியர் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, பதாகைகள் மற்றும் மேளதாளங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் ஊர்வலம் சென்றபோது, மேளதாளம் வாசிக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், பின்னர், மேளதாளம் இசைக்காமல் அமைதியாக ஊர்வலம் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்