வெள்ளகோவில்.
வெள்ளகோவில், வி.பி.எம்.எஸ். நகரை சேர்ந்தவர் ஆர்.குணசேகரன் (வயது 50). இவர் பத்திர எழுத்தர். இவர் நேற்று முன்தினம் இரவு வெள்ளகோவில்-மூலனூர் ரோட்டில் சேரன் நகர் என்ற இடத்தில் ஸ்கூட்டரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் குணசேகரனை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குணசேகரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.