கிணற்றில் வாலிபர் பிணம்

செஞ்சி அருகே கிணற்றில் வாலிபர் பிணம் போலீசார் தீவிர விசாரணை

Update: 2023-07-11 18:45 GMT

செஞ்சி

செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் பனமலை உமையாள்புரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் யுவராஜ்(வயது 22). சென்னையில் கூலி வேலை செய்து வந்த இவர் அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். ஆனால் சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு யுவராஜ் மதுபோதையில் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து செல்ல முயன்றதை அவரது தந்தை கண்டித்ததால் அவரை தாக்கிவிட்டு சென்றவர் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அதே ஊரில் உள்ள விவசாய கிணற்றில் யுவராஜ் பிணமாக மிதந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த அனந்தபுரம் போலீசார் விரைந்து வந்து யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவுசெய்து யுவராஜ் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்