கீழ் நீராறு அணையில் படகு சவாரி

ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் கீழ் நீராறு அணையில் படகு சவாரி தொடங்கப்படுமா? என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-01-23 18:45 GMT

வால்பாறை

ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் கீழ் நீராறு அணையில் படகு சவாரி தொடங்கப்படுமா? என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கீழ் நீராறு அணை

மலைப்பிரதேசமான வால்பாறையில் இயற்கை எழிலுக்கு பஞ்சமில்லை. பச்சை பசேல் என காட்சியளிக்கும் தேயிைல தோட்டங்கள், செழித்து வளர்ந்த வனப்பகுதிகள், நிரம்பி வழியும் அணைகள், மலைகளை மோதிச்செல்லும் மேகக்கூட்டங்களை இதமான காலநிலையில் கண்டு ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

இந்த நிலையில் வால்பாறையில் உள்ள கீழ் நீராறு அணையை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் அந்த அணையில் எப்போதும் தண்ணீர் இருக்கும். எனவே அங்கு படகு சவாரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வருகை அதிகரிக்கும்

இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறியதாவது:-

கீழ் நீராறு அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். இங்கு சுற்றி பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இந்த அணை பகுதியில் படகு சவாரி செய்தால், சிறப்பாக இருக்கும். இதை தொடங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இது தவிர வியாபாரம் உள்பட சுற்றுலா சார்ந்த தொழில் மேம்படுவதோடு, அரசுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும். சுற்றுலா பயணிகள் வருகையும் மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்