லாலாபேட்டையில் படகு போட்டி

லாலாபேட்டையில், படகு போட்டி நடந்தது.

Update: 2023-01-18 18:57 GMT

லாலாபேட்டை பகுதியில் மீனவர் சங்கம் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு படகுபோட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டி லாலாபேட்டை வழியாக செல்லும் தென்கரை வாய்க்காலில் நடந்தது. இதில் ஒரு படகிற்கு 2 பேர் வீதம் துடுப்பு போட வசதியாக இருந்தனர். இதில் மொத்தம் 9 படகுகளில் மொத்தம் 18 பேர் இருந்தனர். இதையடுத்து 9 படகுகளும் தண்ணீர் செல்லும் எதிர்திசையில் சீறிப்பாய்ந்து சென்று திரும்பி வந்து இலக்கை அடைந்தது. இதில் சக்திவேல்- அண்ட் சக்திவேல் முதலிடத்தையும், சங்கர்-பாஸ்கர் 2-வது இடமும், ரமேஷ்குமார்-சக்திவேல் 3-வது இடத்தையும் பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்