கடலூர் துறைமுகத்தில் படகில் தீ

கடலூர் துறைமுகத்தில் படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Update: 2022-07-09 19:29 GMT

கடலூர் முதுநகர்,

கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் இஸ்மாயில்(வயது 42). இவர், நாகப்பட்டினத்தில் விசைப்படகை வாங்கி, கடந்த 1-ந் தேதி கடலூர் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள ஆற்றில் நிறுத்தி வைத்துள்ளார். இந்த படகு நேற்று கியாஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டது. அப்போது அந்த படகு திடீரெ தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இது தொடர்பாக கடலூர் துறைமுகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்