ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்த விபத்து: கடலில் மூழ்கிய மீனவர் உடல் காசிமேட்டில் கரை ஒதுங்கியது
ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கிய மீனவர் உடல் காசிமேட்டில் கரை ஒதுங்கியது.;
எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மனோஜ் (வயது 22), கணேஷ் (24), வெங்டேசன் (28) ஆகிய 3 பேரும் கடந்த 17-ந்தே தி இரவு எண்ணூரில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். சென்னை துறைமுகம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது கடலில் தோன்றிய ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. 3 பேரும் கடலுக்குள் விழுந்தனர். இதில் மனோஜ், கணேஷ் இருவரையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வெங்கடேசன் மட்டும் மாயமானார். இந்தநிலையில் நேற்று மாலை காசிமேடு மீன்பிடிதுறை முகம் அருகே கடலில் வெங்கடேசன் உடல் கரை ஒதுங்கியது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வெங்கடேசன் , உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.