பூத்து குலுங்கும் சைனீஸ் டிரம்பெட் மலர்கள்

பூத்து குலுங்கும் சைனீஸ் டிரம்பெட் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Update: 2023-01-22 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரியில் இருந்து கட்டபெட்டு செல்லும் பகுதியில் சைனீஸ் டிரம்பெட் செடிகள் உள்ளன. இந்த செடிகள் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. செடிகள் 10 மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியது. இந்த செடியில் பூக்கும் ஆரஞ்சு நிற மலர்கள் டிரம்பெட் எனப்படும் இசை கருவியைப் போன்று இருக்கும். தற்போது கோத்தகிரியில் சைனீஸ் டிரம்பெட் செடிகளில் மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்குகின்றன. வாசமில்லாத மலராக இருந்தாலும் காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கி வசீகரித்து வருகிறது. கட்டபெட்டு முதல் ரேலியா அணை வரை செல்லும் சாலையோரத்தில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் சைனீஸ் டிரம்பெட் மலர்கள் பூத்துக் குலுங்குவதை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன், புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இந்த மலர்கள் சொகுசு பங்களாக்களின் அழகுக்காக மாடித் தோட்டங்களிலும், வேலியாகவும் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்