அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், தர்மபுரி மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார். முகாமில் ரத்ததானம் வழங்குவதால், அதனை கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் ஏற்படும் நன்மைகள், ரத்ததானத்தின் அவசியம் ஆகியவை குறித்து ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் லாவண்யா விளக்கினார். 55-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ரத்ததானம் செய்தனர். இதில் இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் பேராசிரியர் சுஜிதா, செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் சித்ரா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.