ஆட்டோ டிரைவர்கள் நலச்சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
கடையநல்லூரில் ஆட்டோ டிரைவர்கள் நலச்சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் இக்பால் நகர் சுதந்திர ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம், தென்காசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியும் இணைந்து ஹிதாயத்துல் இஸ்லாம் தொடக்கப்பள்ளியில் ரத்ததான முகாமை நடத்தியது. முகாமிற்கு மாவட்ட சுதந்திர தொழிலாளர் ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் அயூப்கான் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க நிர்வாகிகள் பாபர், சிந்தாமதார், முகமது சலாம், முஸ்லிம் லீக் நகர தலைவர் சையது மசூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜித், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, நகர்மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான், ஓய்வு பெற்ற சுகாதார பணிகள் இணை இயக்குனர் மீரான் மைதீன், தி.மு.க. நகரச் செயலாளர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பாராட்டு தெரிவித்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.