ரத்ததான முகாம்

சேரன்மாதேவியில் ரத்ததான முகாம் நடந்தது.

Update: 2022-12-04 18:45 GMT

சேரன்மாதேவி:

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் கிராம உதயம் பொது மேலாளர் மற்றும் அறங்காவலர் தமிழரசியின் 5-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோபாலசமுத்திரம் கிராம உதயம், அம்பை அரசு மருத்துவமனை மற்றும் பத்தமடை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து, ரத்ததான முகாமை கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடத்தியது.

கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேல ஆழ்வார்தோப்பு நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் மற்றும் தலைமை அலுவலக நிர்வாக மேலாளர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். அம்பை ரத்தவங்கி அலுவலர் ராஜேஷ்வரி, பத்தமடை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷைலா ஆகியோர் ரத்த தானம் வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினர். தனி அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார மேற்பார்வையாளர் பூங்கொடி, சுகாதார ஆய்வாளர் அக்பர் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில், கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்