தூத்துக்குடி அருகே உள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து ரத்ததான முகாம் நடந்தது. முகாமில் கோவில்பட்டி அரசு ரத்த வங்கி மருத்துவ அதிகாரி ஸ்ரீவெங்கடேஷ், ஒட்டநத்தம் வட்டார மருத்துவ அதிகாரி தங்கமணி ஆகியோர் தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதில் 50 மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.
விழாவில் கல்லூரி செயலாளர் ஜீவன் ஜேக்கப், கல்லூரி முதல்வர் இளங்குமரன் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.