தூத்துக்குடியில் ரத்த தான முகாம்

தூத்துக்குடி வடக்கு ஒன்றிய கூட்டுறவு பிரிவு பா.ஜனதா சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

Update: 2022-09-27 18:45 GMT

தூத்துக்குடி வடக்கு ஒன்றிய பா.ஜனதா கூட்டுறவு பிரிவு சார்பில் ஜனசங்கத்தின் நிறுவனரும், பா.ஜனதா கட்சி நிறுவனருமான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்தநாள், பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். கருங்குளம் ஒன்றிய தலைவர் முருகபெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ரத்ததானம் செய்தனர்.

மேலும் வடக்கு ஒன்றிய கூட்டுறவு பிரிவு தலைவர் விவேக் ஏற்பாட்டில் புதிதாக 25 உறுப்பினர்கள் இணைந்தனர். புதிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கூட்டுறவு பிரிவு மாநில துணைத்தலைவர் அருமைதுரை, கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் மாரிதுரைசாமி, கூட்டுறவு பிரிவு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர்கள் கமலபுஷ்பம், நைனார், ராம்குமார், ஆனந்த முத்துபாண்டி, பா.ஜனதா நிர்வாகி ஜோதி, ஓட்டப்பிடாரம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி, தூத்துக்குடி வடக்கு ஒன்றிய தலைவர் விவேக், ஒன்றிய செயலாளர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்