குற்றாலத்தில் ரத்ததான முகாம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு குற்றாலத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குற்றாலம் சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார். முகாமில் 47 பேர் ரத்த தானம் செய்தனர். மேலும் 25 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், குற்றாலம் கவுன்சிலர் கிருஷ்ணராஜா, செயலாளர் சங்கர் என்ற குட்டி, வீட்டு வசதி சங்க தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.