சாக்கடை கால்வாயில் அடைப்பு:சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்:பொதுமக்கள் அவதி

போடியில், சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2023-01-19 18:45 GMT

போடி மேல ராஜ வீதியில் காமராஜர் பஜார் உள்ளது. இது நகரின் முக்கிய சாலை பகுதி ஆகும். இங்கு பஸ் நிறுத்தம், கோவில் மற்றும் பல வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் நேற்று அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க கால்வாயை அடிக்கடி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்