அடிப்படை வசதி செய்து தரக்கோரி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
அடிப்படை வசதி செய்து தரக்கோரி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி நியூ எம்.ஜி.ஆர். நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தேங்கி கிடக்கும் குப்பைகள், நிரம்பி வழியும் சாக்கடை கழிவுநீர் மற்றும் புதர் மண்டி கிடக்கும் குடியிருப்புகளை சீரமைக்க கோரியும், மயானம் கேட்டும், அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரியும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குடிசை மாற்று வாரிய மக்கள் சமுதாய நலச்சங்க முன்னாள் செயலாளர் வடிவேல் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.