சேலத்தில் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

சேலத்தில் பெரியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.;

Update:2023-06-28 15:48 IST

சேலம்,

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோயம்புத்தூர் சென்று, அங்கிருந்து கார் மூலமாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

இதற்கிடையில், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், வாழ்வுரிமை கட்சியினர் சேலம் அரசு பொறியியல் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு சட்டை அணிந்து கைகளில் கருப்பு கொடி ஏந்தி நூற்றுக்கணக்கானோர் கோஷமிட்டனர்.

கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக தமிழ்நாட்டுக்கு எதிராக சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசி வருவது, தமிழக சட்டசபையில் நிறைவேற்றக்கூடிய மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் கிடப்பில் போடுவது, தமிழ்நாடு மக்களின் நலனை பாதிக்கும் வகையில் செல்லப்படுவது என பல்வேறு வகையில் செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொளத்தூர் மணி உள்பட ஏராளமானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பல்கலை நிர்வாகம் உரிய மரியாதை அளிக்கவில்லை என கூறி பாமக எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம் வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்